கண்ணா உன்
கண்ணா உன் காலடியில் கிடந்துழலும் பேதை நான்
உண்ணாமல் உறங்காமல் உன் நினைவில் நானிருப்பேன்
பண்ணிசைத்து நீ ஊதும் குழலொலி யை ரசித்திருப்பேன்
உன்சிரிப்பில் எனை மறந்து உறங்காமல் பசித்திருப்பேன்
வண்ணமயில் பீலிதனைக் கண்டுமனம் களித்திருப்பேன்
உண்டுலகை நீ உமிழ்ந்த கதை கேட்டு மகிழ்ந்திருப்பேன்
No comments:
Post a Comment