ராதாகிருஷ்ணன்
பல்லவி
கண்ணன் பாதி ராதை பாதி
வண்ணமுறக் கலந்திருக்கும் உன்னைத்துதித்தேன்
அனுபல்லவி
எண்ணத்தில் தோன்றி இதயத்தில் காட்சி தரும்
புண்ணியனே கேசவா எனைக்காக்க வேண்டுமென
சரணம்
விண்ணிலுள்ள தேவரும் சுகசனகாதியரும்
மண்ணிலுள்ள மாந்தருமனைவரும் காண
பண்ணிசைத்துக் குழலூதும் கண்ணனுக்கிணையாக
கண்ணசைத்துக் நடனமிடும் ராதையுடன் சேர்ந்து
No comments:
Post a Comment