ஆண்டாளும் ரங்கனும்
பல்லவி
ஆண்டாளும் ரங்கனும் ஒன்றாகச்சேர்ந்து
காண்பவர் மனம் மகிழும் காட்சி கண்டு துதித்தேன்
அனுபல்லவி
வேண்டுவோர் வேண்டும் வரங்களைத் தந்திடும்
மாண்புடைய அன்னையும் அன்புடைய கேசவனும்
சரணம்
ஆண்டவனாய் உலகாளும் அலுவல்கள் நீக்கி
தீண்டும் அரவு அணைதனை விட்டு விட்டு
ஈண்டு விட்டு சித்தர் மருமகனாய்க் கோலம் கொண்டு
மீண்டும் நமக்கருள திருவில்லிபுத்தூரில்
No comments:
Post a Comment