ஆறுமுகன்
பல்லவி
அறுமுகந்தன்னில் குமரா என்னை
ஒருமுகம் பார்த்தாலும் போதுமென வேண்டினேன்
அனுபல்லவி
குறுநகையுடன் வள்ளி தெய்வானை அருகிருக்கும்
முருகா உந்தனிரு தாமரைப் பதம் பணிந்தேன்
சரணம்
கருநீலவண்ணன் கேசவன் மருகா
திருச்செந்தூர் வளர் செந்தில் நாதனே
அருமறைகள் போற்றும் முத்துக்குமரா
இருவினைப் பயன் நீங்கி நலமுடன் நான்வாழ
No comments:
Post a Comment