95: நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை, உனக்கே பரம்: எனக்கு உள்ளம் எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன்:- அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே.
ஏ, அபிராமி! அழியாத குணக்குன்றே! அருட்கடலே! மலையரசன் பெற்றெடுத்த அழகிய கோமள வல்லியே! எனக்கு உரிமை என்று எப்பொருளும் இல்லை. அனைத்தையும் அன்றே உன்னுடையதாக்கி விட்டேன். இனி எனக்கு நல்லதே வந்தாலும், தீமையே விளைந்தாலும், அவற்றை உணராது விருப்பு, வெறுப்பற்றவனாவேன். இனி என்னை உனக்கே பரம் என்று ஆக்கினேன்.
அபிராமி (95)
பல்லவி
அனைத்துமுனக்கென அளித்த பின்னாலே
எனக்கென்ன மனக்கவலை தாயே அபிராமி
அனுபல்லவி
இனியென் வாழ்வில் நல்லதும் தீயதும்
உனதருளாலென்று தஞ்சமடைந்து
சரணம்
தினமுன் மலர்ப் பதம் சரணடைந்தோர்க்கு
அனைத்து நலன்களும் அளிப்பவள் நீயே
தினகரகுலத்தோன் கேசவன் சோதரி
கனகமலைதனில் வீற்றிருப்பவளே
No comments:
Post a Comment