பங்காரு காமாக்ஷி
பல்லவி
தேவி நீயே துணை
தஞ்சை மாநகர் வளர் பங்காரு காமாக்ஷி
அனுபல்லவி
மாவிடை வாகனன் மனங்கவரீச்வரி
தேவகி மைந்தன் கேசவன் சோதரி
சரணம்
பூவிலமர் நான்முகனும் நான்மறையுமிந்திரனும்
தேவரும் முனிவரும் வணங்கிடும் பூவையே
உனதருள் இல்லையேல் உலகமுய்யுமோ
மனமிரங்கி எனக்கருள வேண்டினேன் உனையே
No comments:
Post a Comment