64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு
பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப்
பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.
ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.
அபிராமி (64)
பல்லவி
உன்னையறி வேறோர் தெய்வம் நாடேன்
அன்னையே உன்னையே அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
உன் புகழே பாடி உன்னெழிலே கண்டு
உன்னருள் வேண்டினேன் கேசவன் சோதரி
சரணம்
உன்னொளியே நான்கு திசையிலும் கண்டேன்
என் மனக்கோயிலில் உனக்கே இடமளித்தேன்
தன்னலங்கொண்டு வீணே பலிகொள்ளும்
இன்னொரு கடவுளைத் தேடித் திரியேன்
No comments:
Post a Comment