சேவற்கொடியோன்
பல்லவி
சேவற்கொடியோனை உளமாரத் துதித்தேன்
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிந்திடும்
அனுபல்லவி
தேவகி மைந்தன் கேசவன் மருகனை
நாவுக்கினிய பல நாமங்களுடையனை
சரணம்
தேவியரிருவர் மேவிடும் குகனை
கூவியழத்தால் ஓடோடி வருபவனை
கோவணமணிந்த பழநியாண்டவனை
தூவி மலர் சொரிந்து பாதம் பணிந்து
துரிதம்
தேவரும் மூவரும் முனிவரும் மறைகளும்
யாவரும் போற்றிக் கரம் பணிதேத்தும்
No comments:
Post a Comment