குன்றுதோறாடும் குமரன்
பல்லவி
குன்றின்மேல் நின்று குறைதீர்க்கும் குமரா
இன்றிங்கெழுந்தருளி எனைக் காத்தருள்வாயே
அனுபல்லவி
கன்று பசுவையழைப்பது போலுனையழைத்தேன்
நன்றும் தீதுமனைத்தும் அறிந்தவனே
சரணம்
அன்று திருச்செந்தில் மாநகர்தனிலே
நின்று சூரன் பகை முடித்த வேலா
என்றுமடியார்கள் நலம் காக்கும் பாலா
தொன்று தொட்டுப் புகழ் விளங்கும் கேசவன் மருகா
No comments:
Post a Comment