வெற்றி கணபதி
பல்லவி
வெற்றிதரும் கணபதியை மனமாரத்துதித்தேன்
சுற்றி வந்து பணிந்திடும் பக்தர்களுக்கெல்லாம்
அனுபல்லவி
கற்றிடுமடியவர் புத்தியிலிருப்பவனை
நெற்றிக் கண்ணன் மகனை கேசவன் மருகனை
சரணம்
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்றும்
உற்றதுணை அவனென்று உளமார நினைந்து
பற்றனைத்தும் துறந்து பற்றினேன் அவனது
பொற்றாமரையடியே சதமெனப் பணிந்து
No comments:
Post a Comment