ஸ்ரீ ஹரி விட்டலன்
பல்லவி
பண்டரினாதனைப் பாண்டுரங்கனை
பண்டரிபுரந்தன்னில் கண்டு துதித்தேன்
அனுபல்லவி
சண்டையிட்டு பல அரக்கரை வென்றவனை
புண்டரீகாக்ஷனைப் புருஷோத்தமனை
சரணம்
வண்டாடும் சோலைதனில் குழலூதி நிற்பவனை
கண்ணனைக் கார்மேகவண்ணனைக் கேசவனை
உண்டுலகுமிழ்ந்த வேணுகோபாலனை
கண்டவர் மனம் களிக்கும் ஸ்ரீ ஹரி விட்டலனை
No comments:
Post a Comment