கண்ணன் திருவடி
பல்லவி
கண்ணன் திருவடியே சரணடைந்தேன்
எண்ணமெல்லாமவன் நாமமே போற்றி
அனுபல்லவி
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரே காட்சி தரும்
கண்ணியம் நிறைந்த மாதவன் கேசவன்
சரணம்
வண்ணமிகு பேரழகன் தண்மதி முகத்தினன்
விண்ணோரும் பணிந்தேத்தும் சக்கரக்கையன்
எண் திசையும் போற்றும் மண்ணையுண்ட வாயன்
திண்ணமுடன் நமைக்காக்கும் தீனசரண்யன்
No comments:
Post a Comment