சரவணன்
பல்லவி
சரவணபவகுகனை சண்முகனை
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி உளமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அரனயனரி பணி கார்த்திகேயனை
குறமகளை மணந்த முத்துக்குமரனை
சரணம்
நரர்சுரரும் நந்தியும் கணங்களும் முனிவரும்
சுரபதியும் ரதிபதியும் அனைவரும் வணங்கிடும்
பரமசிவன் மகனை சேவற்கொடியோனை
அரவிந்த பதத்தானைக் கேசவன் மருகனை
No comments:
Post a Comment