வினைதீர்க்கும் விநாயகன்
பல்லவி
தினமுனைத் துதித்தேன் கணபதியே
உனதருள் தந்தெனைக் காத்திடுவாய்
அனுபல்லவி
சினந்தெனை வெறுத்தாலும் பரிந்தெடுத்தணைத்தாலும்
எனது துணை நீயே கேசவன் மருகனே
சரணன்
அனலேந்தும் நெற்றிக் கண்ணன் சிவன் மகனே
ஜனன மரண பவச்சுழல் நீக்கிடும்
விநாயகனே வினைதீர்பவனே
அனாத நாதனே ஆனைமுகத்தோனே
No comments:
Post a Comment