அணியரங்கன்
பல்லவி
அரங்கனை அப்பனை சிந்தையில் புகுந்தவனை
பரம் பொருளக் கேசவனை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அரங்க நாயகி அருகிருந்து போற்றும்
கருநிறவண்ணனை பாற்கடல் வாசனை
சரணம்
ஒருகையில் சங்கும் மறு கையில் சக்கரமும்
திருத்துழாய் மாலை யும் கிரீடமுமணிந்தவனை
பெரு மலை போலவே திருமேனியுடைவனை
அரவணையில் பள்ளி கொண்ட ஆதிபிரானை
No comments:
Post a Comment