நட்பு
"உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."
துணி அவிழ்ந்தால் அனிச்சையாய்
துடித்து சரி செய்ய விரையும் கரம் போல
துன்பம் தீர்க்க விழைவதே நட்பு!
இன்னும்
நிறைகுறையறிந்து முழுமையாய்
உறவுடன் இருப்பதும்
உயர்விலும் தாழ்விலும் கூட நிற்பதும்
அறநிலை தவறா அறிவுரைப்பதும்
நன்மை தீமையில் பங்கு கொள்வதும்
எதிர்பாராமல் உதவி செய்வதும்
உயிர்போவதானாலும் உடனிருந்து காப்பதும்
தயிரினுள் வெண்ணைபோல் பிரியாதிருப்பதும்
உயிருக்குயிராய் தோழமை கொள்வதும்
சான்றோர் உரைக்கும் நட்பின் இலக்கணம்!!
"உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."
நட்பின் இலக்கணம் !
துணி அவிழ்ந்தால் அனிச்சையாய்
துடித்து சரி செய்ய விரையும் கரம் போல
துன்பம் தீர்க்க விழைவதே நட்பு!
இன்னும்
நிறைகுறையறிந்து முழுமையாய்
உறவுடன் இருப்பதும்
உயர்விலும் தாழ்விலும் கூட நிற்பதும்
அறநிலை தவறா அறிவுரைப்பதும்
நன்மை தீமையில் பங்கு கொள்வதும்
எதிர்பாராமல் உதவி செய்வதும்
உயிர்போவதானாலும் உடனிருந்து காப்பதும்
தயிரினுள் வெண்ணைபோல் பிரியாதிருப்பதும்
உயிருக்குயிராய் தோழமை கொள்வதும்
சான்றோர் உரைக்கும் நட்பின் இலக்கணம்!!
No comments:
Post a Comment