Saturday, 12 July 2014

ஆடியபாதம்






ஆடியபாதம் 


பல்லவி

ஆடிய பாதத்தை நாடித்துதித்தேன்

 பாடிப்பரவி நெஞ்சார நினைந்து

அனுபல்லவி

தேடிப்பிரமனும் கேசவனும் ஓடிய

ஈடிணை இல்லாத புகழ்மிகு பாதத்தை 

சரணம் 

கோடித் தவம் செய்யும் முனிவரும் தேவரும்

ஆடிடும் அரம்பையரும் நந்தியும் கணங்களும்

கூடிநின்று குமரனும் கணபதியுமிந்திரனும்

வேடிக்கை காணும் சிதம்பர நாதனின்






No comments:

Post a Comment