" உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்."
அம்பலவாணன்
பல்லவி
நிலவணிந்த பெம்மானை அம்பலவாணனை
உலகநாதனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
சுலபமாயுளம் குளிர்ந்தடியார்க்கருள் தரும்
அலகிலாவிளையாட்டுடையானை சிவனை
சரணம்
புலன்களின் பின்னே அலைந்திடும் மனத்தினை
நிலைபெறச்செய்திடும் வரம் தர வேண்டி
தலங்கள் தோறும் வலம் வந்து அனுதினம்
மலர்ப்பதங்களைப் பற்றிப் பணிந்து
No comments:
Post a Comment