மூலாதாரமூத்தி
பல்லவி
மூலாதார மூர்த்தியே சரணம்
காலாந்தகன் மகனே கற்பக களிறே
அனுபல்லவி
வேலாயுதனின் மூத்தோனே ஐங்கரனே
நீலநிறத்தழகன் கேசவன் மருகனே
சரணம்
பூலோகம்தனில் பிறந்து பிழைபல புரிந்து
ஆலோசனையின்றி உழன்று திரிந்த என்னை
காலத்தில் தடுத்தாண்டு காத்தருள வேண்டுமென
ஞால முதல்வனே உனை வேண்டி பதம் பணிந்தேன்
No comments:
Post a Comment