Wednesday, 2 July 2014

கங்கணபதி



 ஓம் கங்கணபதி 

பல்லவி

 பலவித வடிவில் காட்சியளித்திடும்

கங்கணபதியை  மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

அலகிலா விளையாடல் புரிந்த ஐங்கரனை

நிலவின் பிறையணிந்த ஆனைமுகத்தோனை

சரணம்

குலம் கல்வி செல்வம் நல்வாழ்வு மோட்சம்

அனைத்துமளித்திடும் வேழமுகத்தோனை

உலகினை உண்டுமிழ்ந்த கேசவன் மருகனை

வலஞ்சுழி கரிமுகனை விக்னவினாயகனை




No comments:

Post a Comment