Friday, 4 July 2014

ஓம் கங்கணபதி

 ஓம் கங்கணபதி 


 பல்லவி

 கங்கணபதே சரணம் சரணம்

 சங்கரன் புதல்வா சரணம் சரணம் -ஓம்

துரிதம் 

தேவரும் முனிவரும் நந்தியும் கணங்களும் 

மூவருமனைவரும் முதன்  முதல் துதித்திடும் 

 அனுபல்லவி

 அங்குச பாச மேந்திய சுமுகனே

 பங்கய நாபன் கேசவன் மருகனே

 சரணம்

 செங்கதிரோனை மிஞ்சும் தேசுடைய கரிமுகனே

 மங்கள மூர்த்தி திருவடி சரணம்

 முங்கிடச் செய்யும் பொங்கும் பவக்கடல் கடந்திட

 எங்களுக்கருளும்  பங்கய பதத்தானே





No comments:

Post a Comment