ஆரூர் புலியூரான்
பல்லவி
புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
பிறவாத நாளே அறிவாய் மனமே
அனுபல்லவி
மலர் கொன்றை மாலை சூடிய ஈசனை
அலங்காரப்பிரியன் கேசவன் நேசனை
சரணம்
பலம் மிகு வயிரமலை போன்ற வடிவினனை
நிலவணிந்தவனை உமையொருபாகனை
ஒளி தரும் சுடர் விளக்கை அருமறைப் பொருளை
மலர் நிறைந்த சோலை சூழாரூர் தனிலுறையும்
No comments:
Post a Comment