செங்கோட்டு வேலன்
பல்லவி
செங்கோட்டுவேலனை மனமாரத் துதித்தேன்
சங்கரன் சங்கரி இருவரும் கொண்டாடும்
அனுபல்லவி
செங்கண்ணன் ஆதி கேசவன் மருகனை
சிங்கார வேலனை சேவற் கொடியோனை
சரணம்
நங்கையர் வள்ளி தெய்வானையை மணந்தவனை
பங்கய பதத்தானைக் கந்தனைக்குமரனை
பொங்கும் மூவாசைப் பிணி தனைக் களைந்திட
இங்குமங்குமலை பாயும் மனக் குரங்கை யடக்கிட
No comments:
Post a Comment