Wednesday, 30 July 2014

திருப்பாவையமுதம்



அழகிய கப்பல்கள் உலாவும் திருப்பாற்கடலை, மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி என்ற அரவத்தை கயிறாக்கிக் கடைந்த பரமமூர்த்தி, கேசவன் (அழகிய சுருண்ட நீள்முடி கொண்டவன்) மற்றும் மாதவன் (திருமகளின் கணவன்) என்று திருநாமங்களைக் கொண்டவன்.
சந்திரனை ஒத்த அழகிய முகத்தை உடைய, அழகிய ஆபரணங்களை அணிந்த, இடைச் சிறுமியர், அப்பிரானை அடைந்து திருவடி பணிந்து, அவனது சன்னிதியில், தாங்கள் வேண்டிய பறையைப் (தங்கள் புருஷார்த்தத்தைப்) பெற்ற அந்த செய்தியை விளக்கி,
அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதரித்தவளும், அன்றலர்ந்த தாமரை மலரால் ஆகியகுளிர்ந்த மாலையை அணிந்த பட்டர்பிரானின் (பெரியாழ்வார்) திருமகளும், ஆன கோதை நாச்சியார், அருளிச் செய்த சங்கத் தமிழ் மாலையாகிய இந்த முப்பது பாசுரங்களை, குறையில்லாமல் ஓதும் அடியார்களுக்கு
நான்கு பெருமலைகளை ஒத்த திருத்தோள்களையும், சிவந்த திருக்கண்களையும், அழகிய திருமுகத்தையும் கொண்ட, அனைத்துச் செல்வங்களுக்கு அதிபதியான திருமால், இம்மையிலும், மறுமையிலும் கருணை காட்டி, (அவன் சேர்க்கையால்) பேரானந்தத்தை அருளுவான் !

  திருப்பாவையமுதம் 

  பல்லவி 

  மாதரார் மட்டுமின்றி அடியார்களனைவரும் 
  தீதின்றி ஓதிடும் திருப்பாவை புகழ் கேளீர் 

  அனுபல்லவி 

  வேதங்களின் பொருளை கேசவன் மகிமையை 
   சாதாரணருமறிய ஆண்டாள் அருளிய 
  
    சரணம் 

  கோதை ஓதிய முப்பதும் தப்பாமல் 
   ஒதிடுமடியார்க்கு திண்தோளன் செங்கண்மால் 
   வேதனை வினைதீர்த்து இகபரமிரன்டிலும் 
   நாதனவனருள் தந்து ஆனந்தம் அளித்திடுவான் 





No comments:

Post a Comment