வண்ண கணபதி
பல்லவி
வண்ணமயமான வாரண முகனை
கண்ணாரக் கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
வெண்ணிலவின் பிறைதனை சூடிய கரிமுகனை
வெண்ணையுண்ட வாயன் கேசவன் மருகனை
சரணம்
பண்ணிசை நாடக நாட்டிய ரசிகனை
விண்ணவர் மண்ணவரனைவரும் வணங்கிடும்
கண்கவரழகனை காரமர் மேனியனை
கண்பார்த்தெனையே காத்தருள வேண்டுமென
No comments:
Post a Comment