கோவிந்தன்
பல்லவி
கோவிந்தனே எந்தன் கண்கண்ட தெய்வம்
தூவி மலர் சொரிந்து அவன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிபவன்
பூவிதழ் மலர்ந்து புன்னகை புரிபவன்
நாவிற்கினிய நாமம் பல உடையான்
சரணம்
கூவியழைத்தால் ஓடோடி வருவான்
தாவியணைத்துத் துன்பம் களைந்திடுவான்
தேவியைத் தன் மார்பில் சூடிய மாலவன்
கோவில் கொண்டென் மனத்தில் கொலுவிருக்கும் கேசவன்
No comments:
Post a Comment