பத்ரகிரி வைகுண்ட ராமன்
பல்லவி
கருடவாகனனை கமலனாபனை
அருள்தரும் வைகுண்ட ராமனைப் பணிந்தேன்
அனுபல்லவி
தருமநெறி காக்க மானுடனாயவதரித்த
திருமாலைக் கேசவனை கோதண்ட ராமனை
சரணம்
உருகி உளமாரத் துதித்த சபரிக்கு
கருணையுடன் வீடு பேறளித்த ராகவனை
திருவடியாலகலிகை சாபம் தீர்த்தவனை
இருள்சூழென் மனம் ஒளியுறச் செய்திட. ( கருட ...)
வருந்தித் துதித்திடுமடியார் நலம் பேணும்
கருணாமூர்த்தியை கலியுக வரதனை
பெருமைக்குரிய பத்திரகிரித் தலத்தில்
திருமகள் சீதையுடன் எழுந்தருளிக் காட்சி தரும் ( கருட ...)
No comments:
Post a Comment