Monday, 28 July 2014

மாயக்கண்ணன்



 மாயக்கண்ணன் 


பல்லவி 

கண்ணனைக் கண்டு மனம் களிப்படைந்தேன் 

வண்ணமுறக் காட்சி தரும் கேசவனை மாதவனை 

அனுபல்லவி 

எண்ணமெல்லாமவன் லீலைகளை நினைந்து 

பண்ணிசைத்து பாடிப் பரவசமானேன் 

சரணம் 

 தண்மதி ஒளிமுகம் தலைதனில் மயில்பீலி

 கண்களில் அழகுடன்  கருமைதீட்டி

  மின்னுமணிமணியும் கௌத்துபமும் பூட்டி

  விண்ணோரும் மண்ணோரும் வியந்து நோக்கிடும்(கண்ணனை •••)

 
   அண்ணாந்து பார்க்கச்செய்யும் அழகு திருமுகமும்

    மண்ணையும் வெண்ணையுமுண்ட பவளவாயும்

    தண்டை கிண்கிணியணிந்த தாமரைப் பாதமும்

    கொண்டவனை கோபியர் மனம் கவர்ந்த மாயனை  ( கண்ணனை •••)



No comments:

Post a Comment