Friday, 4 July 2014

அபிராமி


38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்--
அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.



அபிராமி

பல்லவி

 மலரடி பணிந்தோர்க்கு அமரருலகளிக்கும் 

 சிவந்த வாயுடையாளை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

தலங்களுள் சிறந்த திருக்கடையூர் திருத்தலத்தில்

கொலுவிருக்கும் ஈஸ்வரியை அன்னை அபிராமியை

சரணம்

மலையென விளங்கும் முலைகளால் நோகும்

உடுக்கை போலுள்ள  சிற்றிடைதனையே

பலமுடன் அணைத்த சங்கரனின் தவத்தைக்

கலைத்தவளை  மலைமகளை கேசவன் சோதரியை





















No comments:

Post a Comment