திருப்பெருந்துறை சிவன்
பல்லவி
உன்னையன்றி வேறோர் தெய்வம் தொழாத
என்னையாண்டருள இன்னும் தாமதமேன்
அனுபல்லவி
உன்னடி பணிந்தோர் பவப்பிணி களைந்தார்
என்னும் புகழுடைய கேசவன் நேசனே
சரணம்
கன்னலே தேனே கரும்பே இன்னமுதே
மின்னும் செஞ்சடை மேல் மிளிர் கொன்றையணிந்தவனே
உன்னருள் ஒன்றே உலகில் வேண்டினேன்
பொன்னே மாமணியே பெருந்துறை வளர் சிவனே
No comments:
Post a Comment