ராஜகணபதி
பல்லவி
அரசராய்க் கொலுவிருந்து அகிலம்தனைக்காக்கும்
ராஜ கணபதியை மனமாரத் துதித்தேன்
துரிதம்
சுரபதி பசுபதி சரஸ்வதியின்பதி
ரகுபதி ரதிபதி அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
கரமலரில் கதையேந்தி வரம்தரக்காத்து நிற்கும்
அரன்மகனை அய்ங்கரனை கேசவன் மருகனை
சரணம்
நரர்சுரரும் நந்தியும் கணங்களுமமரரும்
சரவணனும் முனிவர்களும் கரம் பணிந்தேத்தும்
சிரசில் பிறையணி சூடிய கரிமுகனை
பரமதயாளனை ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment