Saturday, 12 July 2014

தழுவி நிற்கும் கணபதி


தழுவி  நிற்கும் கணபதி 


பல்லவி

தழுவக் குழைந்தவனை நமச்சிவாயனை

 தழுவி நிற்கும் கணபதியை மனமாரத் துதித்தேன்

அனுபல்லவி

 முழுநிலவின் ஒரு பிறையை சூடிய கரிமுகனை

 முழு முதற் கடவுளை கேசவன் மருகனை

 சரணம்

 தொழுதிடுமடியார்க்கு அருளளிப்பவனை

  முழுவதும் பாரதக் கதையனைத்தையுமே

  எழுதிட உதவிய வேழமுகத்தோனை

  பழுதில்லாத ஆனைமுகத்தோனை

No comments:

Post a Comment