பஞ்சமுக ஆஞ்சநேயர்
பல்லவி
அஞ்சு முக மாருதியை ஆஞ்சநேயனை
தஞ்சமடைந்தேன் தயை புரிவாயென்று
அனுபல்லவி
பஞ்சவர்க்குத் துணை நின்ற கேசவனின் தூதனாய்
நெஞ்சகத்தில் ராகவனை நிலையாகக் கொண்டவனை
சரணம்
அஞ்சாது பகை வெல்ல கிழக்கு முகமும்
அஞ்சிடும் நெஞ்சைக் காக்க தெற்கு முகமும்
நஞ்சுடலை அண்டாதிருக்க மேற்கு முகமும்
பஞ்சம் தவிர்த்திடும் வடக்கு முகமும் கொண்ட ( அஞ்சு ...)
எஞ்சிய அதோ முகம் வாழ்விலனைத்து
வெற்றியும் செல்வாக்கும் வாக்கின் வன்மையும்
கற்றிடும் கல்வியில் மேம்மையும் சிறப்பும்
பெற்றிடச் செய்திடும் பெருமைகளுடைய ( அஞ்சு )
No comments:
Post a Comment