Tuesday, 15 July 2014

மருந்தீச்வரன் மகன்





மருந்தீச்வரன் மகன் 


பல்லவி

திருவருள் தருவாய் கணபதியே

பெரும்பிணி பவக்கடல் கடந்திட எனக்குன்

அனுபல்லவி

வருமிடர் தீர்ப்பவனே கேசவன் நேசனே

மருந்தீச்வரன் மகனே மாதயாநிதியே

சரணம்

 குருவாய் தகப்பனுக்கோதிய குமரனின்

 அருமை சோதரனே  ஆனைமுகத்தோனே

 கருணைக்கடலே வாரண முகனே

 அரு மறைப் பொருளே ஆதி தேவனே
 





No comments:

Post a Comment