பிள்ளையாரப்பன்
பல்லவி
அழகுடன் திகழும் ஆனைமுகத்தோனை
நிழலவன் கழலென நம்பித்துதித்தேன்
துரிதம்
அழகன் முருகன் நந்தி கணங்கள்
நரர்சுரர் முனிவர் நான்முகன் வணங்கிடும்
அனுபல்லவி
சுழலும் சக்கரக் கையன் கேசவன் மருகனை
பழகு தமிழ் போற்றும் பிள்ளையாரப்பனை
சரணம்
பழம் பாக்கு வெற்றிலை நைவேத்தியம் வைத்து
தொழுதிடுமடியாரின் துயரிடர் களைபவனை
அழலேந்தும் முக்கண்ணன் மகனைக்கரிமுகனை
முழுமுதற்கடவுளை மோதகப்பிரியனை
No comments:
Post a Comment