சார் போஸ்ட்
உனக்கும் எனக்கும் இருந்ததன்று
வரவுக்காகக் காத்திருந்த
உறவுக்கு மகிழ்ச்சி தந்ததன்று
பலருக்கும் பயனாய் சேவையாய்
சிலருக்குப் பொழுது போக்காய்
உலகுக்கே மிக முக்கியமாய் விளங்கியதன்று
இலக்கியமும் காதலும் வளர்த்த ஒன்று
நலம் நலமறிய ஆவலென்று
பலரும் தொடங்கி எழுதியதன்று
விலைமதிப்பில்லாத பொக்கிஷாமாக
கொண்டாடிய ஒன்று
அடடா வருத்தமே அது அழிந்துவிட்டதின்று !!!
No comments:
Post a Comment