Monday, 14 July 2014

சிவக்கொழுந்தீசர்

திருநாவுக்கரசர் அருளியது

கோவாய் முடுகி யடுதிறற்
கூற்றங் குமைப்பதன்முன்
பூவா ரடிச்சுவ டென்மேற்
பொறித்துவை போகவிடின்
மூவா முழுப்பழி மூடுங்கண்
டாய்முழங் குந்தழற்கைத்
தேவா திருச்சத்தி முற்றத்
துறையுஞ் சிவக்கொழுந்தே.

சிவக்கொழுந்தீசர்


பல்லவி

 சிவக்கொழுந்தீசனை   உமையொருபாகனை

 பவ வினை விலக  உவந்து துதித்தேன்

அனுபல்லவி

அவதாரம் பல எடுத்த கேசவன் நேசனை

 அனலேந்துமீசனைத் தழுவக் குழைந்தவனை

 சரணம்

கவலைதரும்  காலனெனை அணுகும் முன்னமே

புவனேஸ்வரனுன்  பொற்பாதம் பதித்தென்

அவலம் தீர்த்து ஆண்டருள வேண்டுமென

தவ யோகியர் போற்றும் சத்திமுற்றத்துறை






No comments:

Post a Comment