மறைபுகழ் கணபதி
பல்லவி
குறைகளைக் களைந்து நிறைகளையளித்திடும்
மறைபுகழ் கணபதியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
பிறை நிலவணிந்தவனை கேசவன் மருகனை
அறவோர் வணங்கிடும் ஆனைமுகத்தோனை
சரணம்
உறவு பாசத் தளைகளைக் களைந்து
இறைவனின் நாமமே இதயத்திலிருத்தி
கறைபிறவிப் பிணி விலக வேண்டுமெனத் துதித்து
சிறையுடல் நீங்கி பரகதியடைந்திட
No comments:
Post a Comment