Sunday, 13 July 2014

சிவகாமேச்வரன்


     



ஆனந்த தாண்டவம் என்பது சிவபெருமான் ஆடும் தாண்டவங்களில் ஒன்றாகவும். ஐம்பெரும் தாண்டவம், சப்த தாண்டவம், நவ தாண்டவம் மற்றும் பன்னிரு தாண்டவம் என்ற தாண்டவகைகளுள் முதன்மையானதாகும்.
சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தினைக் காண சிதம்பரம் தலத்தில் பதஞ்சலி முனிவரும்,வியாக்ரபாதரும் தவமிருந்தனர். அவர்களின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார்.
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாகவும், பிரபஞ்ச இயக்க நடனமாகவும் போற்றப்படுகிறது. இந்நடனத்தினை சிதம்பரத்தில் சிவபெருமான் ஆடினார். ஆனந்த தாண்டவம் ஆடும் சிவபெருமானின் கோலம் நடராஜர் என்று அறியப்பெறுகிறது.திருச்சிற்றம்பலம்.

      சிவகாமேச்வரன் 

    பல்லவி

  ஆனந்த தாண்டவமாடிடும்  சிவனை

   தீனசரண்யனை மனமாரத்துதித்தேன்

     துரிதம்

 மான்மழு உடுக்கை டமருகமக்னி

கரங்களிலேந்தி புலித்தோலணிந்து

     அனுபல்லவி

   மீனாயவதரித்த கேசவன் நேசனை

  வானவர் வணங்கிடும் சிவகாமேச்வரனை

     சரணம்

   ஞானியர் பதஞ்சலி வியாக்ரபாதரும் 

  மோனத்தவம் செய்து வேண்டியதற்கிணங்க 

  வானினின்றிறங்கி ஐந்தொழிலியற்றும் 

   கூனல் பிறையணிந்த ஆடவல்லானை 

  

    

   
   
   

No comments:

Post a Comment