ஓம் நமச்சிவாய
பல்லவி
சிவனருளாலே அவன் நாமம் துதித்தேன்
கவனமெல்லாமவன் பாதத்திலிருத்தி
அனுபல்லவி
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் நேசன்
தவமுனிவோர் துதிக்கும் அருள்தருமீசன்
சரணம்
அவனியிலவனுக்கு அவனேநிகர்
பவபயம் போக்கும் அவனது நாமம்
குவலயம் காக்கும் ஈசனின் நாமம்
சிவபுரமளிக்கும் சிவனது நாமம்
No comments:
Post a Comment