ஸ்ரீ லலிதாம்பிகை
பல்லவி
அம்பிகை நீயே அருள்புரிவாயே
நம்பித்துதிதேன் தாயே - லலிதா
துரிதம்
ஆடியில் நாடித் துதிப்பவர்க்கெல்லாம்
கோடி வினைதீர்க்கும் காளி பைரவி
அனுபல்லவி
உம்பர் முனிவர் தொழும் சங்கரி கௌரி
அம்புய நாபன் கேசவன் சோதரி
சரணம்
சம்பு கபாலியின் மனங்கவர் கற்பகமே
சும்ப நிசும்பரை அழித்தவளே தேவி
வெம்பவக் கடலினைக் கடந்திட வேண்டியே
செம்பொற் பதம் பணிந்தேன் ஸ்ரீ க்ருஷ்ணமாரி
No comments:
Post a Comment