கரங்களின் பெருமை
"கராக்ரே வசத்தே லக்ஷ்மீ கரமத்யே சரஸ்வதீ
கரமூலேது கோவிந்த்: ப்ரபாதே கரதர்சனம் "
கரங்களின் பெருமை
பல்லவி
வரம் தரும் கரமும் அபய கரமும்
பரம்பொருள் வடிவாய் பணிந்திடல் வேண்டும்
அனுபல்லவி
அறம் பொருளின்பமனைத்தையும் அடைந்திட
கரங்களே நம் துணை என்பதையறிந்து
சரணம்
கரங்களின் நடுவில் இருக்கும் கலைமகள்
வரம்தரும் திருமகள் திருமால் கேசவன்
நிரந்தரம் அருள் தரக் காலை வேளையில்
கரங்களை விரித்து அனுதினம் துதிப்போம்
No comments:
Post a Comment