மெய்யப்பன்
பல்லவி
மெய்யப்பனை சத்தியகிரினாதனை
மெய்ப்பொருள் வடிவினை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
உய்யவந்த நாச்சியார் உடனிருந்து போற்றும்
அய்யனை ஆதிகேசவனை மாதவனை
சரணம்
பைந்நாகப் பாயை சுருட்டியும் விரித்தும்
மெய் யடியார்க்கருள் செய்த யதோத்காரியை
வையம்காத்த பெருமாளை நாரணனை
செய்த முன் வினைப்பயன் தொலைந்திட வேண்டி
No comments:
Post a Comment