ஆதி கணபதி
பல்லவி
அடைக்கலம் நீயே மகாகணபதியே
கடைக்கண்ணருள் வேண்டி மலர்ப்பதம் பணிந்தேன்
அனுபல்லவி
படைத்தல் காத்தல் அழித்தல் முத்தொழில்
உடைய முழுமுதற் கடவுளே ஐங்கரனே
சரணம்
இடைதனில் பாம்பணியும் தலையில் பிறைமதியும்
குடையலங்காரமும் கொண்ட கரிமுகனே
தடைகளைக் களைந்திடும் ஆனைமுகத்தோனே
விடைவாகனன் மகனே கேசவன் மருகனே
No comments:
Post a Comment