களிர்முகன்
பல்லவி
பளிச்சென விளங்கும் பளிங்கு கணபதியை
களிப்புடன் கண்டு மனமாரத் துதித்தேன்
துரிதம்
நரர்சுரர் நந்தி கணங்கள் முனிவர்
அமரரிந்திரன் அனைவரும் வணங்கிடும்
அநுபல்லவி
ஒளிமிகு வதனமும் தளிர்நடையும் கொண்ட
களிர் முகத்தோனை கேசவன் மருகனை
சரணம்
துளியுமாடம்பரம் இல்லாதவனை
எளிய கடவுளை ஏழைப் பங்காளனை
தெளிவான ஞானமும் செல்வமும் நல்வாழ்வும்
அளித்திடும் அழகனை ஆனைமுகத்தோனை
No comments:
Post a Comment