கணபதி
Melukote Fort, Karnataka
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் ஒற்றைக் கொம்பனை
மகாகணபதியை மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்த சங்கரன் மகனை
பங்கய நாபன் கேசவன் மருகனை
சரணம்
சங்கடமிடர்களையும் மங்கள மூர்த்தியை
பொங்கரவு இடையணிந்த துங்கக்கரிமுகனை
வெங்கதிரோன் ஒளியை மிஞ்சும் வேழமுகத்தோனை
அங்கமில் மதனைவிட பேரழகுடையவனை
சிங்காரவேலனின் அருமைச் சோதரனை
இங்குமங்குமலைபாயும் மனக்குரங்கை அடக்கிடவும்
பொங்கும் மூவாசைப் பிணிதனையே போக்கிடவும்
மங்காத புகழ் மேவும் மணித்வீ ப கணபதியை
No comments:
Post a Comment