Sunday, 13 July 2014

மகிழ்ச்சி தரும் மகாகணபதி



மகிழ்ச்சி தரும் மகாகணபதி 


பல்லவி

கண்டாலும் போதும் மனம் களிக்கச் செய்திடும்

மகாகணபதியை மனமாரத் துதித்தேன்

துரிதம்

 ஒரு கரம் ஈட்டியும் மறுகரம் பாசமும்

  அபயகரத்துடன் மோதகமேந்திடும்

அனுபல்லவி

அண்டசராசரங்களனைத்தையும் காத்திடும்

ஷண்முகன் தமையனை கேசவன் மருகனை

சரணம்

 எண் திசை பாலகரும் அணிமா சித்திகளும்

 கண்ணாயிரத்தோனும் ஒன்பது கோள்களும்

 விண்ணோரும் மண்ணோரும் முனிவரும் பிரமனும்

 திண்ணமாய்ப் பணிந்திடும் ஆனைமுகத்தோனை

No comments:

Post a Comment