Saturday, 12 July 2014

எது கவிதை






எது கவிதை 


இதுவல்லவோ கவிதை

 ஆம் இதுவே கவிதை

மெதுவாகச் சொன்னாலும்

பொதுவாகச்  சொன்னீர்

புதுசாகக் கொள்ள

எதுவுமில்லை என்று  யாரும்

ஒதுக்கிவிட முடியாது

மது மாது காதல் மதமென்று பல

புதுக்கவிதை நடுவே

இது வேறு கருத்துரைக்கும்

புதுக்கவிதை எனச்சொன்னேன்

அதுவும் அனைவர்க்கும் பயனுள்ள கருத்து

எதுவும் நயம்பட உரைத்தால் கவிதை

குதூகலம் தரும் வார்த்தகளின் வரிசை

எதுகையும் மோனையும் இடையிடையே விரவி

ததும்பும் சொற்களின் அழகான அடுக்கு

இதுபோல் கவிதைகள் பல படைக்க வாழ்த்துக்கள் 

No comments:

Post a Comment