Monday, 14 July 2014

ஞான கணபதி


ஞான கணபதி 

பல்லவி

ஆனை முகமுடைய மகாகணபதியை

ஞானக் கொழுந்தினை மனமாரத்துதித்தேன்

 துரிதம்

 வானுறை தேவரும் நந்தியும் கணங்களும்

  நான்முகனிந்திரன னைவரும் வணங்கிடும்

 அனுபல்லவி

சேனை முதலி யென்றும் தும்பிக்கையாழ்வானென்றும்

ஏனையோரழைத்திடும் கேசவன் மருகனை

சரணம்

பானை வயிறுடையவனை பரமசிவன் மகனை

தானைத்தலைவனாய்  கணங்கள் நினைப்பவனை

கூனல் பிறையணிந்த குழந்தைக் கடவுளை

ஈனப்பிறப்பறுத்து  ஞானமளித்திட


No comments:

Post a Comment