மங்கள மூர்த்தி
பல்லவி
தங்க கவசம் அணிந்த கணபதியை
மங்கள மூர்த்தியை மனமாரத் துதித்தேன்
துரிதம்
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
பாங்குடன் விளங்கிடும் குஞ்சர முகனை
அனுபல்லவி
அங்கமில் மன்மதனை மிஞ்சுமழகுடையவனை
திங்கள் பிறை யணிந்த வேழ முகத்தோனை
சரணம்
சங்கரன் மகனை கேசவன் மருகனை
சிங்கார வேலனுக்கு மூத்தோனை க்கரிமுகனை
சங்கடமிடர் களையும் பங்கய பதத்தானை
குங்கும நிறத்தானை குவலயம் காப்பவனை
No comments:
Post a Comment